sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை

/

செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : செப் 19, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 19, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் - -சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

சூணாம்பேடு, வெடால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர், பல்வேறு பணிகளுக்காக செய்யூருக்கு வந்து செல்கின்றனர். ஆனால், செய்யூர் -- சூணாம்பேடு இடையே டவுன் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனம் கூட இல்லாதவர்கள், அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு சென்று வருகின்றனர்.

எனவே, செய்யூர் - -சூணாம்பேடு இடையே, வெடால் வழியாக டவுன் பஸ் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us