/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி கட்டடங்களுக்கு வண்ணம் பூச கோரிக்கை
/
அரசு பள்ளி கட்டடங்களுக்கு வண்ணம் பூச கோரிக்கை
ADDED : மே 12, 2025 01:02 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் மதுராந்தகம், செங்கல்பட்டு என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர்,லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார் மலை என வட்டார வாரியாக மாவட்டத்தில் 481 தொடக்கப்பள்ளிகள் ,188 நடுநிலைப்பள்ளிகள், 65 உயர்நிலைப் பள்ளிகள் ,80 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 814 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளின் உள்ள கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், பழுது நீக்கம் செய்வது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை செய்து வருகின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தவிர பெரும்பாலான பள்ளி கட்டடங்கள் கலையிழந்து காணப்படுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த காலங்களில் அரசு பள்ளி கட்டடங்கள் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வண்ணம் பூசு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் கூட மீண்டும் வண்ணம் பூசப்படாமல் உள்ளது.
இதனால் கட்டடங்களின் சுவர்களில் பாசி படிந்து பாழடைந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக, கட்டங்களின் உறுதித்தன்மை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தற்போது கோடை விடுமுறையை பயன்படுத்தி பள்ளி கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களில் வண்ணம் பூசவும் மாணவ -- மாணவியரை கவரும் வகையில் ஓவியங்களை வரையும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.