/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதிவாக்கம் புதிய குளக்கரையில் கல் பதித்து பாதுகாக்க கோரிக்கை
/
புழுதிவாக்கம் புதிய குளக்கரையில் கல் பதித்து பாதுகாக்க கோரிக்கை
புழுதிவாக்கம் புதிய குளக்கரையில் கல் பதித்து பாதுகாக்க கோரிக்கை
புழுதிவாக்கம் புதிய குளக்கரையில் கல் பதித்து பாதுகாக்க கோரிக்கை
ADDED : பிப் 26, 2024 12:35 AM

மதுராந்தகம் : மதுராந்தகம் -- உத்திரமேரூர் நெடுஞ்சாலை ஓரம், புழுதிவாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக, 2022- -- 23ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12.68 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக குளம் வெட்டப்பட்டது.
குளத்தை சுற்றி மண்ணால் கரை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டதில், மண் சரிந்து குளத்தின் உள்பகுதியில் நிரம்பியுள்ளது.
மேலும், கால்நடைகளாலும் கரை பகுதியில் மண் சரிந்து வருகிறது. இதனால், குளத்தில் உள்ள நீர் பயன்படுத்த முடியாதவாறு, சேற்று நீர் போல் உள்ளது.
கடந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, இந்த குளத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து, 10 அடி துாரம் தள்ளி, குளக்கரைகளை அமைத்தால், மழை மற்றும் கோடை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு, குளத்தின் உள்பகுதியில் மண் சேருவதை தடுக்க முடியும் என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், இக்குளக்கரையை பார்வையிட்டு, மண் சரிவை தடுக்கும் வகையில், குளக்கரையை சுற்றி, கருங்கற்கள் பதிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

