/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
/
பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
ADDED : மார் 15, 2025 06:46 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு என்.ஜி.ஜி.ஒ., நகர் பகுதிக்கு, பாலாற்று குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த, மேலமையூர் ஊராட்சியில், என்.ஜி.ஜி.ஓ., நகர், காமராஜர் நகர் பகுதிகளில், இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, செங்கல்பட்டு அடுத்த, மாமண்டூர் பாலாற்றில் இருந்து, குழாய் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பல ஆண்டுகளாக, தமிழ்நாடு குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பகுதிக்கு, முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை, இதனால், தனியாரிடம் குடிநீர் கேன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வினியோகம் முறையாக செயல்படுத்த, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி, குடிநீர் வினியோகம் சீரான முறையில் வழங்க, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.