/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

ADDED : மே 05, 2025 01:30 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 59 ஊராட்சிகள் உள்ளன. 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 5 பொது மருத்துவர்கள் உள்ளனர். 6 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். பிரசவ வார்டில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.
தினமும் 350 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் புறநோயாளிகள், இருக்கை வசதி இல்லாததால், மரத்தடி நிழல் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் வாசல் படிகள், வராண்டா பகுதிகளில் அமருகின்றனர்.
எனவே, மருத்துவமனை வளாகத்தில், முதியோர்கள் மற்றும் புறநோயாளிகள், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் அமரும் வகையில், இருக்கைகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.