/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடைந்துள்ள ஏரி மதகு புதிதாக கட்டித்தர வேண்டுகோள்
/
உடைந்துள்ள ஏரி மதகு புதிதாக கட்டித்தர வேண்டுகோள்
ADDED : ஆக 11, 2025 11:19 PM
செங்கல்பட்டு, மோசிவாக்கம் கிராம ஏரியில் மதகு உடைந்துள்ள நிலையில், புதிதாக கட்டித் தர வேண்டு மென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த மோசிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மூலமாக, 250 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், இந்த ஏரியின் மதகு உடைந்துள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், பயிர் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இல்லாமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, விவ சாயிகள் கூறியதாவது:
மோசிவாக்கம் ஏரியின் மதகை சீரமைக்க வேண்டுமென, திருக்கழுக்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. புதிதாக மதகு கட்டித்தரக் கோரி, ஊராட்சி சார்பில் கலெக்டர் சினேகாவிடம் மனு அளித்துள்ளோம்.
இந்த மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை துார்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.