/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ஆபத்தான மரம் அப்புறப்படுத்த கோரிக்கை
/
செங்கையில் ஆபத்தான மரம் அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 01:49 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில் ராஜேஸ்வேரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி, மின்வாரிய அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.
இந்த இடங்களுக்கு, ஜி.எஸ்.டி., சாலையில் தினமும், ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில், சாலையின் ஓரமாக உள்ள மரம் ஒன்று, முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக, இவ்வழியாக செல்லும், கல்லுாரி மாணவியர் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த மரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் முறையிட்டனர்.
ஆனால், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இச்சாலை வழியாக அரசு பேருந்து மற்றும் பிற வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லும் போது, மரக்கிளைகளில் உரசி செல்கின்றன.
பெரிய விபத்து ஏற்படுவதற்குள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.