/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாயை அகற்றி கால்வாய் பணியை உடனே முடிக்க கோரிக்கை
/
குடிநீர் குழாயை அகற்றி கால்வாய் பணியை உடனே முடிக்க கோரிக்கை
குடிநீர் குழாயை அகற்றி கால்வாய் பணியை உடனே முடிக்க கோரிக்கை
குடிநீர் குழாயை அகற்றி கால்வாய் பணியை உடனே முடிக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 02:45 AM

பல்லாவரம்,:பல்லாவரத்தில் இருந்து ஜி.எஸ்.டி., - ராஜிவ் காந்தி சாலைகளுடன், பரங்கிமலை - மடிப்பாக்கம், வேளச்சேரி - மேடவாக்கம் சாலைகளையும் இணைத்து, 2003ல், 10.6 கி.மீ., நீளத்திற்கு, நான்கு வழிப்பாதையாக ரேடியல் சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது.
கிழக்கு கடற்கரை, ராஜிவ் காந்தி சாலை வழியாக செல்லும் வாகனங்கள், விரைவாக ஜி.எஸ்.டி., சாலையை அடைகின்றன. பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்துார், மீனம்பாக்கம், பூந்தமல்லி, பம்மல் போன்ற சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தோரும், இதன் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்கின்றனர்.
வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ரேடியல் சாலையை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இத்திட்டத்தில், சில இடங்களில் மட்டுமே விரிவாக்கம் செய்து, சாலை அமைத்து, மழைநீர் கால்வாய் கட்டியுள்ளனர். விரிவாக்கம் செய்யப்பட்ட பல இடங்களில் சாலை அமைக்கவில்லை. ஜல்லி கொட்டியதோடு அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, அந்த இடங்கள் முழுக்க முழுக்க, தனியார் வாகன நிறுத்தமாகவே மாறிவிட்டன. மழைநீர் கால்வாயை தொடர்ச்சியாக இல்லாமல், பாதி பாதியாக கட்டி அப்படியே விட்டு உள்ளனர்.
வேல்ஸ் சிக்னல் அருகே, விடுபட்ட 1,600 அடி துாரத்திற்கு கால்வாய் கட்டும் பணி, சில வாரங்களாக நடந்து வருகிறது.
அந்த இடத்தில், நிலத்திற்கடியில் குடிநீர் வாரிய குழாய் செல்வதால், அதன் நிர்வாகத்துடன் இணைந்து, அந்த குழாயை அகற்றி, சற்று தள்ளி புதைத்து, கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதன் காரணமாக, அந்த இடத்தில் ஒரு வழிப்பாதையாக மாறி, 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, மழைநீர் கால்வாய் கட்டும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.