/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்மாற்றியை அகற்ற கோரிக்கை
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்மாற்றியை அகற்ற கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறான மின்மாற்றியை அகற்ற கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறான மின்மாற்றியை அகற்ற கோரிக்கை
ADDED : மார் 11, 2024 10:42 PM

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையை ஒட்டி, மாம்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளன.
இரண்டு பள்ளிகளிலும், பல்வேறு பகுதிகளிலிருந்து, 5,000த்துக்கும் மேற்பட்ட மாணவ- -- மாணவியர் படிக்கின்றனர். மேற்கண்ட இரண்டு பள்ளி நுழைவாயில்கள் அருகே, சாலையை ஒட்டி மின்மாற்றி அமைந்துள்ளது.
இந்த மின்மாற்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள் மற்றும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் என, அனைவருக்கும் இடையூறாக உள்ளது. இதனால், போக்கு வரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்துள்ளன.
எனவே, இடையூறாக உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற, மின்சாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.