/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை
/
கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 12:57 AM

மேல்மருவத்துார்:சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, விநாயகர் கோவில் குளக்கரையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, சோத்துப்பாக்கம் ஊராட்சி. இங்கு மதுராந்தகம், செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகம் வசித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு, பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய, போதிய வசதிகள் இல்லை.
இதனால், கடந்த 2023- 24ல், இங்குள்ள விநாயகர் கோவில் குளத்தின் கரை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது, குளக்கரை பகுதியில் முட்புதர் வளர்ந்து, பயன்பாடற்று உள்ளது.
எனவே, குளக்கரை பகுதியை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்த வேண்டும்.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.