/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மின்விளக்கு சீரமைக்க கோரிக்கை
/
சேதமான மின்விளக்கு சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 11:30 PM
பவுஞ்சூர்,பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன் சேதமான உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் பஜார் வீதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் அவசர சிகிச்சை, முதலுதவி, பொது மருத்துவம், மகப்பேறு,நோய்த்தடுப்பு என பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயில் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாமல் இரு ஆண்டுகளாக உயர்கோபுர மின்விளக்கு சேதமடைந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயில் பகுதி முழுதும், இருளில் மூழ்கி உள்ளது.
அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல், இரவு நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் சேதமடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.