/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான குப்பை சேகரிப்பு வாகனங்கள் சீரமைத்து மீண்டும் இயக்க கோரிக்கை

ADDED : மார் 17, 2025 01:22 AM

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் ஊராட்சியில், பழுதடைந்து கிடக்கும் குப்பை சேகரிப்பு வாகனங்களை சீரமைத்து, மீண்டும் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 70,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை, குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குப்பை கழிவுகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமல், தெருக்களில் தேங்கி, ஊராட்சி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்க வாங்கப்பட்ட பல மின்சார வாகனங்கள், உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து, பயன்பாடற்ற நிலையில் உள்ளன.
இந்த வாகனங்களை பழுது நீக்கி, மீண்டும் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.