/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுகோள்
/
சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 08, 2024 01:47 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த போந்துார் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
போந்துார் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பின்புறத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், ஏரி, கிணறு போன்ற நீர்பாசனம் வாயிலாக நெல் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
நுகும்பல் மின்பகிர்வுமனையில் இருந்து இப்பகுதி குடியிருப்பு மற்றும் விவசாய மின்மோட்டார்களுக்கு மினிவிநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயல் காரணமாக, இப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்விநியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதால், வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வயல்வெளிப் பகுதியில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.