/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை
/
ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை
ADDED : மார் 08, 2024 12:31 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமம், விநாயகர் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், தினசரி இரண்டு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் போதிய அளவில் இல்லை என, மக்கள் கூறுகின்றனர்.
அதே தெருவில், பொதுக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு உள்ளது. பொது கிணற்றை துாய்மைபடுத்தி, மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வழங்கலாம் எனவும், ஆழ்துளைக் கிணற்றிலும் மின் மோட்டார் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்க, பொது மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

