/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
/
பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:பூண்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க, வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அருகே முள்ளிபாக்கம் ஊராட்சியில் அடங்கிய பூண்டி கிராமத்தில், கண்ணகி தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை போடப்பட்டது. தற்போது, சாலை பழுதடைந்து, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தும் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.