/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் சீரமைக்க கோரிக்கை
/
செங்கை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் சீரமைக்க கோரிக்கை
செங்கை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் சீரமைக்க கோரிக்கை
செங்கை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 06, 2025 01:51 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலத்தில், பழுதான மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின், இருவழியிலும், 38 மின் விளக்குகள் அமைத்து, மேலமையூர் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்த மேம்பாலம் வுழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற வாகனங்கள் என, தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.
ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பல மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால், அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகின்றன.
இரவு நேரங்களில், மேம்பாலம் இருள் சூழ்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி, மர்ம நபர்கள் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் தொந்தரவு செய்யும் சூழல் உள்ளது. சாலை விபத்து மற்றும் வழிபறி சம்பங்களை தடுக்க, மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, காட்டாங்கொளத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், மின் விளக்குகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.
எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.