/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான குடிநீர் கை 'பம்ப்' சீரமைக்க வேண்டுகோள்
/
பழுதான குடிநீர் கை 'பம்ப்' சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 26, 2025 01:31 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலை ஓரம், கிளை நுாலகம் அருகே பழுதடைந்து உள்ள குடிநீர் கை 'பம்ப்'பை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 12வது வார்டு பகுதியில், பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலை அருகே, பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, குடிநீருக்காக கை பம்ப் வசதி ஏற்படுத்தப்பட்டது.
அங்கு, கிளை நுாலகம் மற்றும் வள்ளலார் கோவிலும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால் வாகன ஓட்டிகள், பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் நுாலகம் செல்லும் வாசகர்கள் என, பல தரப்பினரும் இந்த கை பம்ப்பை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, கடந்த சில மாதங்களாக, இந்த கை பம்ப் பழுதடைந்து, காட்சிப்பொருளாக உள்ளது.
கோடை காலம் என்பதால், பொதுமக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த குடிநீர் கை பம்ப்பை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

