/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பின்றி பாசி படர்ந்த குளம் துார் வாரி சீரமைக்க கோரிக்கை
/
பராமரிப்பின்றி பாசி படர்ந்த குளம் துார் வாரி சீரமைக்க கோரிக்கை
பராமரிப்பின்றி பாசி படர்ந்த குளம் துார் வாரி சீரமைக்க கோரிக்கை
பராமரிப்பின்றி பாசி படர்ந்த குளம் துார் வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 07, 2024 01:48 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி, இரண்டாவது வார்டில், பெருமாள் கோவில் அருகே குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றி வீடுகள், கோவில், அங்கன்வாடி மையம், துணை சுகாதார மையம் உள்ளிட்டவை உள்ளன.
இக்குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து, பாசி படர்ந்து சீரழிந்து வருகிறது. குறிப்பாக, ஆகாயத் தாமரை அதிக அளவில் வளர்ந்து குளத்தை மூடி வருகிறது.
அத்துடன், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த குளத்தில் விடப்படுவதால், குளம் சீரழிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
குளத்தில் அதிக அளவு புதர்மண்டிக் கிடப்பதால் விஷ ஜந்துக்கள் வாழும் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இதனால், அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
குளத்தை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, குளம் முழுதும் உள்ள செடி, கொடிகளை அகற்றி துார் வாரி, தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.