/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 14, 2025 11:31 PM

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுக்கு உட்பட்ட பள்ளப்பேட்டை, சங்குநாதர் விநாயகர் கோவில் தெரு, குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டது.
இக்கால்வாய் வழியாக செல்லும் கழிவுநீர், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் செல்லும் கால்வாயில் சென்று கல்லாற்றில் கலக்கிறது.
இதில், தேசிய நெடுஞ்சாலை ஓரம் செல்லும் கால்வாய் துார்ந்து, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.