/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள்கோவில் -- கருநிலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
சிங்கபெருமாள்கோவில் -- கருநிலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள்கோவில் -- கருநிலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள்கோவில் -- கருநிலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 22, 2025 01:38 AM

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் - கருநிலம் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் -- கருநிலம் சாலை, 6 கி.மீ., துாரம் உடையது. கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவிந்தபுரம், கோகுலாபுரம், மெல்ரோசாபுரம், கருநிலம் உள்ளிட்ட பகுதிகளில், இந்த சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் இச்சாலையில் செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலையோரம் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், இந்த சாலை குறுகி உள்ளது.
மேலும், இச்சாலை பல இடங்களில் கடுமையாக சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜல்லி கற்கள் குத்தி, வாகனங்களின் டயர்கள் பஞ்சராவதால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் இச்சாலையில் திரும்பிச் செல்ல முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, கருநிலம் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

