/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை
/
வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 01, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:வெடால் கிராமத்திலுள்ள ஏரி மதகை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 350 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீர் மூலமாக, 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், ஏரியிலுள்ள மதகு பராமரிப்பின்றி, சேதமடைந்து உள்ளது.
மேலும், ஏரிக்கு தண்ணீர் வரும் பாசன கால்வாய்களும் துார்ந்து போய் உள்ளன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர்ப்பாசன கால்வாய்களை துார் வாரவும்; சேதமடைந்துள்ள ஏரி மதகை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.