/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த மின்கம்பிகள் மாற்றியமைக்க வேண்டுகோள்
/
பழுதடைந்த மின்கம்பிகள் மாற்றியமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 28, 2025 11:53 PM
திருப்போரூர்:மாம்பாக்கம், நந்தா நகரில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி முதலாவது வார்டில், நந்தா நகர் உள்ளது. இப்பகுதியில் 1989ம் ஆண்டு மின் கம்பங்கள் நட்டு, மின் கம்பிகள் அமைக்கப்பட்டன.
அவை நாளடைவில் பழுதடைந்து, 50 முறைக்கு மேல் அறுந்து விழுந்துள்ளதால், மின் கம்பிகளை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மின் கம்பிகள் பழுதடைந்து உள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின் கம்பிகள் அறுந்து விழுந்து, கால்நடைகள் சிக்கி இறக்கின்றன.
குறைந்த மின்னழுத்த பிரச்னையால், வீட்டு உபயோக மின்சாதன பொருட்களும் பழுதடைகின்றன.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மக்கள், கால் நடைகள் பாதுகாப்பு கருதியும், தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், புதிதாக மின்கம்பிகளை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.