/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாசடைந்துள்ள குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
/
மாசடைந்துள்ள குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : அக் 29, 2025 12:27 AM

செய்யூர்: வெடால் ஊராட்சியில், மாசடைந்துள்ள குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே வெடால் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடப்பாக்கம் செல்லும் சாலையோரம், முத்துமாரியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது.
பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல், குளத்தின் கரைகள் மீது குப்பை கொட்டப்படுகிறது.
மேலும், அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலக்கிறது. இதனால் குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் நிலையில் உள்ளது.
மாசடைந்துள்ள குளத்தில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, இரவு நேரத்தில் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, வெடால் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

