/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
/
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
ADDED : நவ 16, 2025 01:49 AM

செங்கல்பட்டு: மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து, 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, நீர்ப்பாசனம் செய்து வந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதால், ஏரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்தவில்லை. தற்போது இந்த ஏரி, இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமா க உள்ளது.
ஆனால், ஏரியை சீரமைக்காததால், ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இதனால், மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டரிடம், நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் நி றுவன நிதி, 30 லட்சம் ரூபாயில், ஏரியை துார்வாரும் பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால் , ஏரியை முறையாக துார்வாரி சீரமைக்கவில்லை. இது, நீர்நிலை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர, ஏரியை துார்வாரி சீரமைத்து, கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நீர்நிலை ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

