/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரத்தி சமூக நலக்கூடம் சேதம் இடித்து புதிதாக கட்டப்படுமா?
/
ஒரத்தி சமூக நலக்கூடம் சேதம் இடித்து புதிதாக கட்டப்படுமா?
ஒரத்தி சமூக நலக்கூடம் சேதம் இடித்து புதிதாக கட்டப்படுமா?
ஒரத்தி சமூக நலக்கூடம் சேதம் இடித்து புதிதாக கட்டப்படுமா?
ADDED : நவ 16, 2025 01:48 AM

அச்சிறுபாக்கம்: ஒரத்தி ஊராட்சியில் உள்ள சமூக நலக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட் பட்ட ஒரத்தி ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அச்சிறுபாக்கம், மதுராந்தகம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் உ ள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால் அதிக செலவுடன், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமூக நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்பாடின்றி உள்ளது.
எ னவே, பழுதடைந்த இந்த சமூக நலக்கூட கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்ட, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

