/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் -- திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை
/
மதுராந்தகம் -- திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை
மதுராந்தகம் -- திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை
மதுராந்தகம் -- திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : மே 03, 2025 01:53 AM
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் வட்டாரம், 200க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
மதுராந்தகம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி மற்றும் சித்ரா புவுர்ணமி தினத்தில், கிரிவலம் செல்வதற்காக அதிகப்படியான பக்தர்கள் செல்கின்றனர்.
ஆனால், மதுராந்தகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. வரும் 12ம் தேதி சித்ரா புவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
மதுராந்தகம் -- திருவண்ணாமலையை இணைக்கும் வகையில் பேருந்து இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.