/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்
/
நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்
ADDED : அக் 18, 2024 01:32 AM
செய்யூர்:செய்யூர் - புதுப்பட்டினம் இடையே, கல்பாக்கம் பணிமனையில் இருந்து, டி2 தடம் எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
பெரும்பாக்கம், ஆக்கினாம்பட்டு, நெல்வாய்பாளையம், மலையூர், கூவத்துார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, தற்போது இயக்கப்படுகிறது.
நெடுமரம், கரிக்காமலை, வேட்டக்காரக்குப்பம் வழியாக, அரசு பேருந்துகளே இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக, கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, டி2 பேருந்தை கூவத்துாரில் இருந்து நெடுமரம், கரிக்காமலை, ஆக்கினாம்பட்டு வழியாக, செய்யூர் வரை இயக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.