/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போந்துாரில் புது கழிப்பறை அமைக்க வேண்டுகோள்
/
போந்துாரில் புது கழிப்பறை அமைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 10, 2025 02:22 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, கடந்த 2012ம் ஆண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம், பொது கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சரியான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் கழிப்பறைகள் சேதமடைந்தன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் இதில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த விருப்பம் காட்டவில்லை.
இதனால், கழிப்பறை வளாகம் பழுதடைந்து, செடிகள் வளர்ந்துள்ளன.
பெரும்பாலான மக்கள் தற்போது, திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள பழைய கழிப்பறைகளை அகற்றி, புதிய கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.