/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 13, 2025 01:12 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
அங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில், நின்று பயணியரை ஏற்றி, செல்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற் குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு, பேருந்து பயணியர் காயமுற்றனர்.
இதை தவிர்க்கும் விதமாக, கடந்தாண்டு பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டது.
தற்போது, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் பேருந்து நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில், வயதானவர்கள் மற்றும் பெண்கள் உட்காருவதற்கு பென்ச் போன்றவை இன்றி உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கடும் வெயிலில் நின்று, காத்திருந்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.