/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்கல் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை
/
நெடுங்கல் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை
நெடுங்கல் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை
நெடுங்கல் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 25, 2025 10:23 PM
அச்சிறுபாக்கம்:நெடுங்கல் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்கல், வெளியம்பாக்கம், கரசங்கால்
ஊராட்சி உள்ளது.
இந்த வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு, நெடுங்கல் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால், வி.ஏ .ஓ., அலுவலகம் கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதனால், தற்போது, கரசங்கால் ஊராட்சியில் உள்ள சேவை மைய கட்டடத்தில், செயல்பட்டு வருகிறது. 2 கி.மீ., துாரத்தில் உள்ள கரசங்கால் பகுதிக்குச் சென்று, பள்ளி, விவசாயம் மற்றும் அரசுக்கு தேவையான ஆவணங்களை பெறுவதில் சிக்கலாக உள்ளது.
எனவே, நெடுங்கல் ஊராட்சியில், வி. ஏ. ஓ., கட்டடம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.