ADDED : மார் 19, 2026 05:08 PM
வண்டலுார்;வண்டலுார் ஊராட்சியில், அரசின் சார்பில் இ- சேவை மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 50000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் உட்பட பல்வேறு ஆவணங்களை புதுப்பிக்கவும், புதிதாகப் பெறவும் இங்கு அரசின் இ - சேவை மையம் இல்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனியார் இ - சேவை மையங்கள் அதிக பணம் வசூலிக்கின்றன. இதனால், பகுதிவாசிகள், மூன்று மடங்கு கட்டணம் செலுத்தி, தங்களுக்கான சேவையைப் பெற வேண்டி உள்ளது.
எனவே, வண்டலுார் ஊராட்சியில் அரசின் சார்பில் இ - சேவை மையம் அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
