/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூர் சாலையில் கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
ஆப்பூர் சாலையில் கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ஆப்பூர் சாலையில் கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ஆப்பூர் சாலையில் கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 08, 2025 11:51 PM

மறைமலைநகர்:மறைமலைநகர் -- ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை சிங்கப்பெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், திருக்கச்சூர், கூடுவாஞ்சேரி ஆகிய சுற்றுப் பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்குச் செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஆப்பூர், சேந்தமங்கலம் கிராம மக்கள், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் ஆப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாலிமங்களம் பகுதியில் இருந்து ஆப்பூர் வரை, 1 கி.மீ., துாரம் வரை மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இருபுறமும் வனப்பகுதி என்பதால், இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஆப்பூர் ஊராட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
இந்த சாலையோரம் மின் விளக்குகள் அமைக்க, ஊராட்சி சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.
மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.