/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : மார் 13, 2024 11:50 PM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைப்புத்துார் ஊராட்சியில், தொழுப்பேட்டில் இருந்து கடமலைப்புத்துார் வழியாக, ஒரத்தி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், கடமலைப்புத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் இருந்த வேகத்தடை, சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது.
பின், சாலை பணிகள் அனைத்தும் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து, சந்திரசேகரன், 42, என்பவர் கூறியதாவது:
பள்ளி அமைந்துள்ள பகுதியில் சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
மேலும், பெரும்பேர்கண்டிகை சாலை பகுதியில் உள்ள மதுபான கடையில், மது வாங்கி அருந்தி விட்டு வரும் மது பிரியர்களாலும் இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.
எனவே, பள்ளி பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடையை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

