/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினத்தில் மழைநீர் வடிகால் அணுமின் நிறுவனத்திடம் கோரிக்கை
/
புதுப்பட்டினத்தில் மழைநீர் வடிகால் அணுமின் நிறுவனத்திடம் கோரிக்கை
புதுப்பட்டினத்தில் மழைநீர் வடிகால் அணுமின் நிறுவனத்திடம் கோரிக்கை
புதுப்பட்டினத்தில் மழைநீர் வடிகால் அணுமின் நிறுவனத்திடம் கோரிக்கை
ADDED : டிச 23, 2024 02:33 AM
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையில், மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால்வாய் அமைக்ககோரி, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடக்கிறது. அணுசக்தி துறையினர் மற்றும் புதுப்பட்டினம் சுற்றுப்புறப் பகுதியினர், இதை போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், குறிப்பிட்ட நீளத்திற்கு மையத் தடுப்புடன் சாலை விரிவாக்கப்பட்டது.
மையத்தடுப்பிற்கு மேற்கில் உள்ள பகுதி, தாழ்வாக உள்ளது.
இதனால், கனமழையின் போது, மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து மூழ்கடித்து, கடைகளின் முன் பல நாட்கள் தேங்குகிறது. இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க, பொதுமக்கள் வருகின்றனர்.
சென்னை செல்லும் பயணியர், பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். இவர்கள் மழைநீர் தேங்கிய சேற்றில் நடந்து அவதிக்குள்ளாகின்றனர்.
அங்குள்ள மின்மாற்றியையும் மழைநீர் சூழ்ந்து, மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட சாலையில், மழைநீர் வடிகால்வாய் எந்த துறையினர் அமைப்பது என, அரசுத் துறையினர் இடையே சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில், 700 மீ., நீளத்திற்கு வடிகால்வாய் அமைக்க கோரி, ஊராட்சித் தலைவர் காயத்ரி, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் மனு அளித்து வலியுறுத்தி உள்ளார்.