/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் மாடவீதி இணைப்பில் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
/
திருப்போரூர் மாடவீதி இணைப்பில் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
திருப்போரூர் மாடவீதி இணைப்பில் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
திருப்போரூர் மாடவீதி இணைப்பில் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 27, 2025 03:35 AM

திருப்போரூர்:திருப்போரூர் கிழக்கு மாடவீதி- நெம்மேலி சாலை இணைப்பில் வாகன நெரிசலை தவிர்க்கவும், இடையூறு இல்லாமல் திரும்பிச் செல்லவும், சாலையை அகலப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகே, சன்னிதி தெரு, கிழக்கு மாடவீதி, நெம்மேலி இ.சி.ஆர்., சாலை என, நான்கு முனை இணைப்பு சாலை உள்ளது.
இதன் வழியாக, மேற்கண்ட சாலை பகுதிகளுக்குச் செல்ல தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் திரும்பிச் செல்லும் போதும், நேராக செல்லும் போதும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் திரும்பும் இணைப்பில் சாலையும் குறுகிய நிலையில் உள்ளதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக சுபமுகூர்த்தம், கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் அனைத்து வாகனங்களும் நகர முடியாமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்கும்.
எனவே, மேற்கண்ட இணைப்பு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

