/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் -- காட்டூர் சாலை அகலப்படுத்த கோரிக்கை
/
திருப்போரூர் -- காட்டூர் சாலை அகலப்படுத்த கோரிக்கை
திருப்போரூர் -- காட்டூர் சாலை அகலப்படுத்த கோரிக்கை
திருப்போரூர் -- காட்டூர் சாலை அகலப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 19, 2025 09:22 PM

திருப்போரூர்:திருப்போரூர் - காட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் -- காட்டூர் சாலையைச் சுற்றி, பல கிராமங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக அம்மாபேட்டை மருத்துவமனை, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். தண்ணீர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்களும், இச்சாலையில் அதிக அளவில் செல்கின்றன.
இந்த சாலையில் கண்ணகப்பட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், 'குடி'மகன்கள் இங்கு குவிகின்றனர்.
இந்நிலையில், சாலையும் குறுகிய நிலையில் உள்ளதால், வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
குறிப்பாக, திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை தொடக்கம் மற்றும் சந்திப்பில் வாகனங்கள் அதிகமாக செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, திருப்போரூர் -- காட்டூர் சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.