/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவி வாயில் 'ஆசிட்' ஊற்றிய கணவருக்கு 'காப்பு'
/
மனைவி வாயில் 'ஆசிட்' ஊற்றிய கணவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 04, 2025 11:24 PM
அயனாவரம், குடும்ப பிரச்னையில், மனைவியின் வாயில் 'ஆசிட்' ஊற்றிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 44; பெயின்டர். இவரது மனைவி டெய்சிராணி, 39; வீட்டு வேலை செய்கிறார். தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டெய்சிராணி 10 நாட்களாக அதே வீட்டில் தனியாக வசித்துள்ளார். இருப்பினும், சீனிவாசன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 31ம் தேதி, வீட்டில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சீனிவாசன், கழிப்பறைக்கு பயன்படுத்தும் 'ஆசிட்'டை டெய்சிராணியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், டெய்சிராணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின்படி, தலைமறைவாக இருந்த சீனிவாசனை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.