/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு 'காப்பு'
/
இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : அக் 06, 2025 01:35 AM

மேல்மருவத்துார்:மேல்மருவத்துாரில், பைக் திருடிய நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன், 60.
இவர் கடந்த மே மாதம், தனக்குச் சொந்தமான,'ஹீரோ டீலக்ஸ்' பைக்கை, மேல்மருவத்துார் ரயில் நிலையத்தின் வெளியே நிறுத்திவிட்டு, சென்னைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
பின், சென்னையில் இருந்து வந்து பார்த்த போது, பைக் திருடு போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மூலமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், அச்சிறுபாக்கம் அடுத்த கீழ் அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 35, என்பவரிடமிருந்து சென்னை, துரைப்பாக்கத்தில் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் சுரேஷை நேற்று ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.