/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 06, 2025 01:36 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தனியாருக்குச் சொந்தமான வீட்டுமனையில் கொட்டப்படும் குப்பையால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பையை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதி தெருவில், தனியாருக்குச் சொந்தமான காலி வீட்டுமனை உள்ளது.
இப்பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால், இந்த மனையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பை, உணவு கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், இப்பகுதியைக் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். எனவே, தனியாருக்குச் சொந்தமான காலி வீட்டுமனையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், காலி வீட்டு மனை அருகே குப்பைத்தொட்டி வைத்து, சேகரமாகும் குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.