/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுபுரம் பகுதியில் குப்பை எரிப்பு நச்சுப்புகையால் பகுதிவாசிகள் பாதிப்பு

ADDED : ஜன 25, 2025 12:07 AM

நெய்குப்பி,
அணுசக்தி துறையின் அணுபுரம் நகரியம், நெய்குப்பி ஊராட்சிப் பகுதி ஒருங்கிணைந்ததாக உள்ளது. நகரிய பகுதியை அணுசக்தி துறையும், நெய்குப்பி பகுதியை ஊராட்சி நிர்வாகமும் நிர்வகிக்கின்றன. நகரியத்தை ஒட்டி, ஊராட்சிப் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், பல்வேறு நகர்ப் பகுதிகள் உருவாகி, ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இச்சூழலில் ஊராட்சி நிர்வாகம், அங்கு சேகரிக்கப்படும் குப்பையை முறையாக கையாளாமல், ஏரி நீர் பிடிப்பு பகுதியில் குவித்து எரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
ஊராட்சி நிர்வாகம் குப்பையை சேகரித்து, அணுபுரத்தை ஒட்டி, நரசங்குப்பம் ஏரி நீர்பிடிப்பு பகுதி திறந்தவெளியில், 15 ஆண்டுகளாக கொட்டி வருகிறது.
ஆனால், அரசு வகுத்த வழிமுறைகளின்படி, அதை முறையாக அப்புறப்படுத்தாமல், தினமும் காலை அங்கேயே எரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரித்து, கடும் துர்நாற்றத்துடன் நச்சுப்புகை பரவுகிறது. அணுபுரம், அதை சுற்றி குடியிருப்பவர்கள், நச்சுப்புகையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை தான் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.