/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருவிளக்குகள் எரியாததால் குடியிருப்புவாசிகள் அச்சம்
/
தெருவிளக்குகள் எரியாததால் குடியிருப்புவாசிகள் அச்சம்
தெருவிளக்குகள் எரியாததால் குடியிருப்புவாசிகள் அச்சம்
தெருவிளக்குகள் எரியாததால் குடியிருப்புவாசிகள் அச்சம்
ADDED : மார் 18, 2024 03:01 AM
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சி, பிரேமாவதி நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கருநிலம் கிராமத்தில் இருந்து, பிரேமாவதி நகர் செல்லும் சாலையில், பல ஆண்டுகளாக இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை.
அதனால், இரவு நேரங்களில் அப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில், பல இடங்களில் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சமீபத்தில், இந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி, 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதன் காரணமாக, இந்த பகுதியை கடந்து செல்லும் போது, பீதியுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, எரியாமல் பழுதடைந்து உள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, அப் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.