/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரத்தில் சாலைகள் படுமோசம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
நந்திவரத்தில் சாலைகள் படுமோசம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
நந்திவரத்தில் சாலைகள் படுமோசம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
நந்திவரத்தில் சாலைகள் படுமோசம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 01:56 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் மஹாலக்ஷ்மி நகர் பிரதான சாலையில், சாலைகள் படுமோசமாக உள்ளன.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மகாலட்சுமி நகர் பிரதான சாலை, முக்கியமான சாலையாக உள்ளது. ஜெயலட்சுமி நகர், அம்சா நகர், உதயசூரியன் நகர், ஜெயேந்திர சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லுாரி செல்லும் பேருந்துகளும் அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்த சாலைகளில் ஆங்காங்கே மேடு பள்ளங்களுடன், ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ள சாலையை சீரமைத்து, பொதுமக்கள் சீராக சென்று வருவதற்கு, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.