/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவாதுார் சாலையில் பாலம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
/
திருவாதுார் சாலையில் பாலம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
திருவாதுார் சாலையில் பாலம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
திருவாதுார் சாலையில் பாலம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 14, 2024 11:45 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த திருவாதுார் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பவுஞ்சூர் பஜார் பகுதியில் இருந்து, திருவாதுார் கிராமத்திற்குச் செல்ல, பிரதான தார்ச்சாலை உள்ளது.
சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதில், திருவாதுார் ஏரி உபரிநீர் சாலையைக் கடக்கும் பகுதியில் பாலம் இல்லாததால், மழைக்காலத்தில் உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், குடியிருப்புப் பகுதியில் உபரிநீர் சூழ்வதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, திருவாதுார் சாலை நடுவே பாலம் அமைத்து, குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.