/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலகண்டை குறுகலான சாலையில் விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்
/
மேலகண்டை குறுகலான சாலையில் விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்
மேலகண்டை குறுகலான சாலையில் விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்
மேலகண்டை குறுகலான சாலையில் விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்
ADDED : ஜன 03, 2024 09:44 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே முதுகரை முதல் கூவத்துார் வரையிலான 25 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மேலகண்டை - கீழகண்டை கிராமங்களுக்கு இடையேயான இரண்டு கி.மீ., சாலை குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, சாலை விரிவாக்க பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.
ஏற்கனவே உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர். இரண்டு புறங்களிலும் தலா 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்து, மொத்தம் 10 மீட்டர் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
நெடுஞ்சாலைத் துறை சார்பாக, சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்படாததால், மேலகண்டை பேருந்து நிறுத்தம் அருகே, 200 மீட்டர் துாரம் சாலை விரிவாக்கப்பணி கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பாக மரங்கள் அகற்றப்பட்டதை அடுத்து, சாலை விரிவாக்கப்பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது.