sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை மாவட்டத்தில் 'பெல்ட் ஏரியா' மக்களுக்கும் பட்டா தடை நீக்கம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வருவாய் துறை முடிவு

/

செங்கை மாவட்டத்தில் 'பெல்ட் ஏரியா' மக்களுக்கும் பட்டா தடை நீக்கம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வருவாய் துறை முடிவு

செங்கை மாவட்டத்தில் 'பெல்ட் ஏரியா' மக்களுக்கும் பட்டா தடை நீக்கம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வருவாய் துறை முடிவு

செங்கை மாவட்டத்தில் 'பெல்ட் ஏரியா' மக்களுக்கும் பட்டா தடை நீக்கம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வருவாய் துறை முடிவு


ADDED : ஜூலை 21, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு :செங்கல்பட்டு மாவட்டத்தில், 'பெல்ட் ஏரியா' உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக, 10,000க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியில், வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.

இப்பகுதிகளில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள், கலெக்டர் அலுவலகத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, மனு அளித்தனர். இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, கள ஆய்வு நடத்தி, தகுதி உள்ளவர்களுக்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர்.

உத்தரவு அரசு நிலம், நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்னையிலிருந்து 32 கி.மீ., சுற்று வட்டாரத்துக்கு, 'பெல்ட் ஏரியா' எனும் மாநகர சூழ்பகுதியாக, 1962ல் அரசு உத்தரவிட்டு பட்டா வழங்க தடை விதித்தது.

இந்த பகுதிகளில் இலவச பட்டா வழங்குவது உட்பட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

இந்த பெல்ட் ஏரியாவில், செங்கல்பட்டு தாலுகாவில் காட்டாங்கொளத்துார், கண்டிகை, தைலாவரம், வல்லாஞ்சேரி, பொத்தேரி, காயரம்பேடு உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன.

திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம், படூர், நாவலுார், கோவளம், முட்டுக்காடு தையாவூர் உள்ளிட்ட 29 கிராமங்கள் உள்ளன.

வண்டலுார் தாலுகாவில் மண்ணிவாக்கம், வண்டலுார், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், நெடுங்குன்றம், ஊனமஞ்சேரி, கொளப்பாக்கம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், வேங்கடமங்கலம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, காரணைபுதுச்சேரி, பெருமாட்டுநல்லுார், தாழம்பூர், மாம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட, 36 கிராமங்கள் உள்ளன.

தாம்பரம் தாலுகாவில் பெருங்களத்துார், முடிச்சூர், மாடம்பாக்கம், அகரம்தென், அஸ்தினாபுரம், மதுரப்பாக்கம், செம்பாக்கம், சிட்லபாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்கள் அடங்கியுள்ளன.

பல்லாவரம் தாலுகாவில் ஜமீன் பல்லாவரம், திரிசூலம், கவுல்பஜார், மூவரசம்பட்டு, பம்மல், பொழிச்சலுார், அனகாபுத்துார், திருநீர்மலை ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், 'பெல்ட் ஏரியா' பகுதி தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கடந்த பிப்., 10ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள,'பெல்ட் ஏரியா' மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்காக, மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து, உடனடியாக இந்த பணிகளை துவக்கி, ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 214 நபர்களின் நிலத்தை வரன்முறைப்படுத்தி, அவர்களுக்கு பட்டா வழங்கி, நகர்ப்புற பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த மார்ச் 11ம் தேதி துவக்கி வைத்தார்.

அப்போது, பெல்ட் ஏரியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களில், 13,942 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அதன் பின், மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர் வண்டலுார், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், 20,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சென்னை, தாம்பரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வரும் போது, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

அதற்கான பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தாம்பரம், பல்லாவரம், வண்டலுார், செங்கல்பட்டு ஆகிய தாலுகாவில், பெல்ட் ஏரியாவில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியில், வருவாய்த் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியை விரைந்து முடிக்க, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின் தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் நில பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், தினமும் இரவு 10:00 மணி வரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தாம்பரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றும் விழாவில், 10,000க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த் துறையினர் தெரிவி த்து உள்ளனர்.

தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் நில பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், தினமும் இரவு 10:00 மணி வரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்






      Dinamalar
      Follow us