/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வருவாய் துறை ஊழியர்கள் செங்கையில் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறை ஊழியர்கள் செங்கையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 09:12 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவிக்க வேண்டும். இதில், பணியாற்றுவோருக்கு, தலைமை செயலக ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற ஊதியம் வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலகங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, பணியிடங்களை உயர்த்தவில்லை. இதனால், பணிவரன்முறை 15 ஆண்டுகளாக காலதாமதமாகி உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்கத்தினர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வளாகத்தில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என, 568 பேர் ஈடுபட்டனர்.