/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வருவாய் துறையினர் உண்ணாவிரதம்
/
செங்கையில் வருவாய் துறையினர் உண்ணாவிரதம்
ADDED : பிப் 13, 2024 10:03 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறையினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணிக்கு பாதுகாப்பு அளித்து அரசாணை வெளியிட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையை வெளியிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வரும் லோக்சபா தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
உங்கள் ஊரில், உங்களை தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப்பணிகளில், அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
திட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

