/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ரிவார்டு' ஆசைக்காட்டி ரூ.49,000 'அபேஸ்'
/
'ரிவார்டு' ஆசைக்காட்டி ரூ.49,000 'அபேஸ்'
ADDED : செப் 21, 2024 09:47 PM
தாம்பரம்:தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 40; எலக்ட்ரீஷியன்.
பாபுவின் மொபைல்போன் எண்ணிற்கு, கடந்த 11ம் தேதி, எஸ்.பி.ஐ., வங்கி 'யோனோ' செயலி வாயிலாக 'ரிவார்டு' கிடைத்ததாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அந்த குறுந்தகவலை பாபு தொட்டதும், நேரடியாக எஸ்.பி.ஐ., வங்கியின் யோனோ செயலிக்குள் சென்றுள்ளது. சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 48,976 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அவர், தன் கணக்கு உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார்.
மேலும், தாம்பரம் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.