/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை கட்டடம் வலுவிழந்ததால் அபாயம்
/
ரேஷன் கடை கட்டடம் வலுவிழந்ததால் அபாயம்
ADDED : ஜன 16, 2025 12:18 AM

அச்சிறுபாக்கம், -ரேஷன் கடை கட்டடம் வலுவிழந்து உள்ளதால், அதை பயன்படுத்வோர் அச்சமடைந்துள்ளனர். கடைக்குள் பொருட்களை பாதுகாப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது.
அச்சிறுபாக்கம் அருகே, பாபுராயன்பேட்டை ஊராட்சியில், 24 ஆண்டுகளுக்கு முன், நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதை, 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. கட்டடம் வலுவிழந்து, சில பகுதிகள் சிறுகச் சிறுக இடிந்து விழுந்து வருகிறது.
எனவே நியாய விலை கடையை, தற்போதைக்கு வேறு இடத்திற்கு மாற்றி, பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டித் தர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.