/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்
/
கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மே 11, 2025 01:41 AM

செய்யூர்:செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தில் அரியனுார் செல்லும் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த குவாரி அனுமதி காலம் நிறைவு பெற்றதால் எட்டு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது.
காலாவதியாகி கைவிடப்பட்ட இந்த குவாரி 100 முதல் 250 அடி ஆழத்திற்கும் மேல் பள்ளம் கொண்டதாக உள்ளது.
பள்ளத்தை சுற்றி எவ்வித தடுப்புகளும்,வேலிகளும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.
இதனால் மலை மற்றும் மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பயன்பாடற்ற கல்குவாரி அருகே செல்லும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
ஓணம்பாக்கம், எல்.என்.,புரம் ,நாகமலை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லாததால் மேச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தவறி பள்ளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. மேலும் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்து தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.